பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல்லில் வீசுது அனல் காற்று

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : 'அனல் காற்று வீசும் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு குறிப்புகள்' குறித்து பேரிடர் மேலாண்மை துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர். அவர்கள் கூறியதாவது: மாவட்டத்தில் சில நாட்களாக வெயில் சுட்டெரிக்கிறது. பகலில் அனல் காற்று வீசுகிறது. இந்நிலை இன்னும் சில நாட்களுக்கு தொடரும். கோடையில் அவ்வப்போது போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நீர் இழப்பை

திண்டுக்கல் : 'அனல் காற்று வீசும் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு குறிப்புகள்' குறித்து பேரிடர் மேலாண்மை துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

அவர்கள் கூறியதாவது: மாவட்டத்தில் சில நாட்களாக வெயில் சுட்டெரிக்கிறது. பகலில் அனல் காற்று வீசுகிறது. இந்நிலை இன்னும் சில நாட்களுக்கு தொடரும். கோடையில் அவ்வப்போது போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நீர் இழப்பை தவிர்க்க மோர், லஸ்ஸி, புளித்த சோற்று நீர், எலுமிச்சை சாறு அருந்தலாம்.கோடை முடியும் வரை வெளிர் நிறமுள்ள காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணியலாம். கண்ணாடி, காலணி அணிந்து குடை பாதுகாப்புடன் வெளியில் செல்லலாம். அடைக்கப்பட்ட நிலையில் வாகனங்களில் குழந்தைகளை தனியே விட்டுச் செல்ல கூடாது.

வெப்பம் அதிகமாகி குழந்தைகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும். குழந்தைகள் பருக இளநீர் போன்ற பானங்களை கொடுக்கலாம். வெப்ப அழுத்தத்தால் முதியவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிந்தால் ஈரத் துணியை கழுத்து மற்றும் கைகளில் வைக்க வேண்டும். குளிர்ந்த நீரில் குளிக்க வைக்கலாம். போதிய இடைவெளியில் நீர் அருந்துவதை உறுதி செய்யலாம். கால்நடைகளை நிழற்கூரை அடியில் கட்டலாம். அவற்றுக்கும் போதுமான தண்ணீர் கொடுக்க வேண்டும். பறவைகளுக்கும் நிழல் கூரை அமைத்து, பருகவும் நீர் கொடுக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X