துாத்துக்குடி:ஓட்டுக்கு பணம் கொடுத்து நடந்த இந்த தேர்தலை ரத்து செய்யவேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
துாத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கிருஷ்ணசாமி துாத்துக்குடியில் கூறியதாவது: 1984ல் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டேன். இதுவரையிலும் இத்தகைய மோசமான தேர்தலை கண்டதேயில்லை. ஏப்.,4 வரை வாக்காளர்கள் என்னை இன்முகத்தோடு வரவேற்றார்கள். ஆனால் அதன் பிறகு ஆயிரம், 500 என பணம் பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது.
மக்களின் முகபாவனை மாறிவிட்டது. இந்த அரசியல் பிழைக்கு அ.தி.மு.க., தி.மு.க., அணிகள் பதில் சொல்லியாகவேண்டும். இந்தியாவில் தேர்தல் ஆணையம் என்று ஒன்று இருப்பதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. ஓட்டப்பிடாரத்தில், மாப்பிள்ளையூரணியில், கருங்குளத்தில் பணம் கொடுத்தவர்களை கையும் களவுமாக பிடித்து கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
பணம் கொடுத்து பெறும் வெற்றியை வைத்து இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள். ஓட்டு எண்ணிக்கையை துவங்ககூடாது. பணம் பட்டுவாடா குறித்து உச்சநீதிமன்ற குழுவினர் ஆய்வு செய்து மீண்டும் தேர்தல் நடத்தவேண்டும். இவ்வாறு கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE