திண்டுக்கல், : திண்டுக்கல்லில் வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
திண்டுக்கல் சுற்று வட்டாரத்தில் பரவலாக தக்காளி பயிரிடப்படுகிறது. குறிப்பாக அய்யலூர், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், வடமதுரை பகுதிகளில் அதிக அளவில் சாகுபடியாகிறது.இது தவிர ஓசூர் பகுதிகளிலிருந்தும் திண்டுக்கல்லிற்கு வரத்து உள்ளது. இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது. தற்போது தக்காளி விளைச்சல் அதிகமாக உள்ளதால் வரத்து அதிகரித்து விலை வெகுவாக குறைந்துள்ளது. பத்து நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.20 முதல் ரூ.30 விற்ற தக்காளி தற்போது ரூ.5 ஆக சரிந்துள்ளது. பொதுமக்கள் வாங்க ஆர்வம் காட்டாததால் தேங்கும் நிலை உருவாகியுள்ளது. வரத்து அதிகரித்துள்ளதால் கிடைத்த விலைக்கு கொடுத்துச் செல்வதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE