பொது செய்தி

தமிழ்நாடு

பழநி மலை படிகளில் கடைகள் கண்டுகொள்ளாத கோயில் நிர்வாகம்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
பழநி : பழநி மலை படிப்பாதையில் பக்தர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமித்துள்ள கடைகளை கோயில் நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது. பழநி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு பரவி வரும் நிலையில், மலைக்கோயிலுக்கு படிப்பாதை வழியாக செல்லும் பக்தர்கள் குடமுழுக்கு மண்டபத்தில் உடல் வெப்பத்தை அறியும்

பழநி : பழநி மலை படிப்பாதையில் பக்தர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமித்துள்ள கடைகளை கோயில் நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது.

பழநி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு பரவி வரும் நிலையில், மலைக்கோயிலுக்கு படிப்பாதை வழியாக செல்லும் பக்தர்கள் குடமுழுக்கு மண்டபத்தில் உடல் வெப்பத்தை அறியும் கருவி வழியே பரிசோதனை செய்து அனுப்பப்படுகின்றனர்.இந்நிலையில் படிப்பாதையில் அமர்ந்து கடைகள் அமைத்து வியாபாரம் செய்வோர் அதிகரித்துள்ளனர். கோயிலில் பணிபுரியும் சிலரின் ஆதரவோடு பல்வேறு பொருட்களை வைத்து மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வியாபாரம் செய்கின்றனர்.

கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு சுகாதார கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், முகக்கவசம், கிருமி நாசினிகள் இல்லாமல் படிக்கடைகளில் வியாபாரம் நடக்கிறது. போலீசாரும், அங்கு பணி புரியும் செக்யூரிட்டிகளும் இதை கண்டுகொள்வதில்லை. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி இருந்த போதிலும் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர். மலைக் கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X