பொது செய்தி

தமிழ்நாடு

சிறுமலை மிளகில் பூச்சித் தாக்குதல்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் சிறுமலையில் பூச்சித் தாக்குதலால் மிளகு சாகுபடி பாதித்துள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சிறுமலை பழையூர், புதுார், அகஸ்தியர்புரம், பொன்னுருவி, குரங்குபள்ளம், தென்மலையில் 1000 ஏக்கரில் மிளகு சாகுபடியாகிறது. உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சிறுமலை மிளகிற்கு தனி மவுசு உண்டு. வழக்கமாக மார்ச், ஏப்ரலில் சீசன் இருக்கும். இந்தாண்டு

திண்டுக்கல் : திண்டுக்கல் சிறுமலையில் பூச்சித் தாக்குதலால் மிளகு சாகுபடி பாதித்துள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சிறுமலை பழையூர், புதுார், அகஸ்தியர்புரம், பொன்னுருவி, குரங்குபள்ளம், தென்மலையில் 1000 ஏக்கரில் மிளகு சாகுபடியாகிறது. உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சிறுமலை மிளகிற்கு தனி மவுசு உண்டு. வழக்கமாக மார்ச், ஏப்ரலில் சீசன் இருக்கும். இந்தாண்டு சாகுபடிக்காக விவசாயிகள் தயாராகி வந்தனர்.இந்நிலையில் சில நாட்களாக மிளகில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் வேர்கள் அழுகி கொத்து கொத்தாக செடிகள் கீழே விழுகின்றன. இதனால் சாகுபடி பாதித்துள்ளது. முப்பது ஆண்டுகளாக வளர்ந்து வந்த செடிகளும் நோயால் பாதித்துள்ளன. மிளகு தற்போது கிலோ ரூ.250க்கு விற்பனையாகிறது.

விலை கட்டுப்படியாகாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், ''அறுவடை சமயத்தில் நோய் தாக்கியதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நோய் தாக்குதல் குறித்து தோட்டக்கலை துறையினர் கண்டு கொள்ளவில்லை. மிளகு மட்டுமின்றி பலா மரத்திலும் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க வேண்டும்'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X