பொது செய்தி

தமிழ்நாடு

மூன்றடுக்கு பாதுகாப்பில் 4 மையங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாவட்டத்தில் பத்து சட்டசபை தொகுதி களிலும் தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கன்ட்ரோல் யூனிட்கள், வி.வி. பேட் இயந்திரங்கள் நேற்று காலை 10:45 மணி வரை நான்கு ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு வரப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. மதுரை மேற்கு, மத்தி, தெற்கு, வடக்கு தொகுதிகளில் பதிவான ஓட்டுக்கள்

மதுரை : மதுரை மாவட்டத்தில் பத்து சட்டசபை தொகுதி களிலும் தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கன்ட்ரோல் யூனிட்கள், வி.வி. பேட் இயந்திரங்கள் நேற்று காலை 10:45 மணி வரை நான்கு ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு வரப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

மதுரை மேற்கு, மத்தி, தெற்கு, வடக்கு தொகுதிகளில் பதிவான ஓட்டுக்கள் மருத்துவக் கல்லுாரி, திருப்பரங்குன்றம், திருமங்கலம் தொகுதிகளின் ஓட்டுக்கள் டி.பி.கே.,ரோடு அரசு பாலிடெனிக் கல்லுாரி, சோழவந்தான், உசிலம்பட்டி தொகுதிகளின் ஓட்டுக்கள் கீழக்குயில்குடி அண்ணா பல்கலை, மதுரை கிழக்கு, மேலுார் தொகுதிகளின் ஓட்டுக்கள் ஒத்தக்கடை வேளாண்மை கல்லுாரி மையங்களில் மே 2 எண்ணப்படவுள்ளன.அந்தந்த மையங்களில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் அவை சீல் வைக்கப்பட்டு, அறைகளில் வைக்கப்பட்டன.

இந்த அறைகளில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தவிர வேட்பாளர் களின் முகவர்கள், வருவாய்த்துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுவர். நான்கு மையங்களிலும் வெப் கேமரா மூலம் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.கடந்த லோக்சபா தேர்தலின் போது மருத்துவ கல்லுாரி ஓட்டு எண்ணிக்கை மையத்தில் பெண் தாசில்தார் நுழைந்த விவகாரம் பிரச்னையானது. எனவே அதிகாரிகள் கூட மையங்களுக்கு எளிதில் சென்று விட முடியாதபடி கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு எப்படிஓட்டுப்பதிவு மையங்களில் காலை 7:00 முதல் மதியம் 2:00 மணி வரை, மதியம் 2:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை, இரவு 10:00 மணி முதல் மறுநாள் காலை 7:00 மணி வரை போலீசார் 3 ஷிப்ட்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். ஒவ்வொரு ஷிப்ட்டிலும் உதவிகமிஷனர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 214 போலீசார் இருப்பர்.இவர்களுடன் வெடிகுண்டு தடுப்புப்பிரிவு போலீசார் 6 பேர் இருப்பர். மின்னணு இயந்திரங்கள் பாதுகாக்கும் அறைகளுக்கு தலா 4 துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X