பொது செய்தி

தமிழ்நாடு

நத்தத்தில் வெப்பத்தால் உதிரும் மாம்பிஞ்சுகள்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
நத்தம் : நத்தம் பகுதியில் கடும் வெப்பம் நிலவுவதால் மாம்பிஞ்சுகள் அதிக அளவில் உதிர்ந்து வருகின்றன. நத்தம், சாணார்பட்டி, கோபால்பட்டி பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் கல்லாமை, காசா, செந்துாரம், இமாம்பசந்த், பங்கனபள்ளி ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. ஐந்து ஆண்டுகளாகவே இப்பகுதியில் போதிய மழையின்றி விளைச்சல் குறைந்திருந்தது. இந்தாண்டு அதிக மழை

நத்தம் : நத்தம் பகுதியில் கடும் வெப்பம் நிலவுவதால் மாம்பிஞ்சுகள் அதிக அளவில் உதிர்ந்து வருகின்றன.

நத்தம், சாணார்பட்டி, கோபால்பட்டி பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் கல்லாமை, காசா, செந்துாரம், இமாம்பசந்த், பங்கனபள்ளி ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. ஐந்து ஆண்டுகளாகவே இப்பகுதியில் போதிய மழையின்றி விளைச்சல் குறைந்திருந்தது. இந்தாண்டு அதிக மழை பெய்ததால் மரங்கள் அதிகளவில் பூவெடுத்திருந்தன. அதேசமயம் புது வகை நோய் தாக்குதலால் பூ மற்றும் பிஞ்சுகள் அதிகம் அழிந்தன. பல முறை பூச்சி மருந்து தெளித்தும் கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் திணறினர்.இதனால் பாதிக்கும் குறைவான மாம்பிஞ்சுகளையே மரங்களில் காண முடிகிறது. இந்நிலையில் நத்தம் வட்டாரத்தில் சில நாட்களாக கடும் வெப்பம் நிலவுகிறது.

இதனால் கல்லாமை ரக மாம்பிஞ்சுகள் அதிக அளவில் உதிர்ந்து வருகின்றன.விவசாயிகள் இவற்றை சேகரித்து மாங்காய் மண்டிகளில் விற்பனை செய்து வருகின்றனர். வெப்பம் தாங்காமல் நடுத்தரமாக விளைந்த காய்களும் உதிர்ந்து விடுமோ என்ற அச்சத்தில் சிலர் தாங்களாகவே காய்களை பறித்து விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.வியாபாரி ஒருவர் கூறியதாவது: ஊறுகாய்க்கு தயாரிக்க பயன்படும் பிஞ்சுகள் தரத்தை பொறுத்து கிலோ ரூ.8 முதல் ரூ.10 வரையிலும், சமையலுக்கு பயன்படும் நடுத்தர காய் கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரையும் விற்பனையாகிறது. இந்தாண்டு 25 சதவீத விளைச்சலே இருக்கும் என்பதால் வரும் நாட்களில் நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X