பாலப்பணிகள் முடிவடையாததால் 7 கி.மீ., சுற்றிச்சென்ற வாக்காளர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாலப்பணிகள் முடிவடையாததால் 7 கி.மீ., சுற்றிச்சென்ற வாக்காளர்கள்

Added : ஏப் 08, 2021
Share
வேடசந்துார் : பாலப் பணிகள் முடியாததால் அரை கி.மீ., தொலைவில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு வாக்காளர்கள் 7 கி.மீ., சுற்றிச்சென்று ஓட்டளித்தனர். பாலப்பட்டி ஊராட்சி நாகமநாயக்கனுார், ராமநாயக்கனுாரில் 320 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கான வாக்குச்சாவடி கூத்தாங்கல்பட்டியில் உள்ளது. இக்கிராம மக்கள், கூத்தாங்கல் பட்டி செல்ல அரை கி.மீ.,யில் உள்ள வறட்டாற்றை கடக்க வேண்டும்.தற்போது

வேடசந்துார் : பாலப் பணிகள் முடியாததால் அரை கி.மீ., தொலைவில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு வாக்காளர்கள் 7 கி.மீ., சுற்றிச்சென்று ஓட்டளித்தனர்.

பாலப்பட்டி ஊராட்சி நாகமநாயக்கனுார், ராமநாயக்கனுாரில் 320 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கான வாக்குச்சாவடி கூத்தாங்கல்பட்டியில் உள்ளது. இக்கிராம மக்கள், கூத்தாங்கல் பட்டி செல்ல அரை கி.மீ.,யில் உள்ள வறட்டாற்றை கடக்க வேண்டும்.தற்போது வறட்டாற்றில் 5 அடி தண்ணீர் தேங்கியுள்ளது. தேர்தல் நாளான நேற்றுமுன்தினம் இதனை கடந்து செல்ல முடியாமல் வாக்காளர்கள் கூவக்காபட்டி, வெரியம்பட்டி வழியாக 7 கி.மீ., சுற்றிச்சென்று கூத்தாங்கல்பட்டியில் ஓட்டளித்தனர். இந்த வறட்டாற்றில் கடந்த ஆண்டு மேம்பாலம் அமைக்க பில்லர் அமைத்தனர்.

ஆனால் வருடங்கள் கடந்தும் பாலம் அமைக்கவில்லை.நாகமநாயக்கனுார் விவசாயி பொம்முசாமி கூறுகையில், ''இப்பகுதி மக்களின் நலன் கருதி, பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X