கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே அடுக்கம் வனப்பகுதியில் காட்டுத் தீப்பற்றி ஏராளமான மரங்கள் கருகின.கோடை காலம் துவங்கினாலே மலைப் பகுதியில் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் எரிவது வழக்கம்.
வனத்துறை முன்னெச்சரிக்கையாக தீத்தடுப்பு கோடுகள், தீத்தடுப்பு காவலர்கள் நியமனம் செய்தும் பாதிப்பு குறைந்தபாடில்லை.நேற்று மாலை அடுக்கம் வனப்பகுதியில் தீ பற்றி மளமளவென பரவியது. இதில் அரிய மரங்கள் கருகின. விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
தீயால் ஏற்பட்ட புகை மண்டலம் மலைப்பகுதியில் சூழ்ந்தது.வனத்துறையினர் தீத்தடுப்பு பணிகளை தாமதமாக துவங்கியதால் இரவுவரை தீயை அணைக்க முடியவில்லை. இதுபோன்ற தீயை தடுக்க வனத்துறையிடம் நவீன உபகரணங்கள் எதுவுமே இல்லை. இலை, தழைகளை கொண்டே தீ அணைக்க போராடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE