பொது செய்தி

தமிழ்நாடு

மூணாறில் பயணிகள் கூடாரம் அமைக்கிறது போக்குவரத்து கழகம்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
மூணாறு:மூணாறில் கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு குறைந்த கட்டணத்தில் கூடாரம் அமைத்து தரப்படுகிறது.கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் கேரள அரசு போக்குவரத்து கழகத்தை மீட்கும் வகையில் வருவாயை அதிகரிப்பதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மூணாறில் கேரள அரசு பஸ் டெப்போவில் ஐந்து பஸ்கள் தங்கும் விடுதியாக
 மூணாறில் பயணிகள் கூடாரம்  அமைக்கிறது போக்குவரத்து கழகம்

மூணாறு:மூணாறில் கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு குறைந்த கட்டணத்தில் கூடாரம் அமைத்து தரப்படுகிறது.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் கேரள அரசு போக்குவரத்து கழகத்தை மீட்கும் வகையில் வருவாயை அதிகரிப்பதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மூணாறில் கேரள அரசு பஸ் டெப்போவில் ஐந்து பஸ்கள் தங்கும் விடுதியாக மாறியுள்ளன.

16 படுக்கைகளைக்கொண்ட பஸ்சில் ஒரு நாள் தங்குவதற்கு நபர் ஒன்றுக்கு ரூ.100 வசூலிக்கின்றனர்.மூணாறு- -டாப் ஸ்டேஷன், மூணாறு-- காந்தலுார் ஆகிய வழித்தடத்தில் சுற்றுலா பகுதிகளை பார்வையிட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இரு திட்டங்கள் மூலம் நல்ல வருவாய் கிடைப்பதால் அடுத்தகட்டமாக சுற்றுலா பயணிகள் கூடாரத்தில் தங்குவதற்கு வசதி செய்யப்படுகிறது.

பழைய மூணாறில் உள்ள பஸ் டெப்போ அருகே கிராண்டீஸ் மரங்களுக்கு இடையே கூடாரம் அமைக்கப்படுகிறது. தற்போது நான்கு பேர் தங்கும் வகையில் இரண்டு கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன. அதில் ஒருநாளைக்கு தங்குவதற்கு நபர் ஒன்றுக்கு ரூ. 200ம், ஒரு கூடாரத்தை மொத்தமாக எடுத்துக் கொண்டால்கட்டணம் ரூ.700ம் வசூலிக்க முடிவு செய்துள்ளனர்.சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும்பட்சத்தில் கூடாரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X