மஹா., அரசு, தேஷ்முக் மனு மீது இன்று விசாரணை| Dinamalar

மஹா., அரசு, தேஷ்முக் மனு மீது இன்று விசாரணை

Updated : ஏப் 08, 2021 | Added : ஏப் 08, 2021 | கருத்துகள் (2)
Share
மும்பை : மஹாராஷ்டிராவில், முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான ஊழல் புகாரை சி.பி.ஐ., விசாரிக்க, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, மாநில அரசு, மேல்முறையீடு செய்துள்ள மனு மீது, உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது. மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மும்பை
மஹாஷடிரா, தேஷ்முக், மனு, விசாரணை

மும்பை : மஹாராஷ்டிராவில், முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான ஊழல் புகாரை சி.பி.ஐ., விசாரிக்க, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து, மாநில அரசு, மேல்முறையீடு செய்துள்ள மனு மீது, உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இங்கு, மும்பை போலீஸ் கமிஷனர் பதவியிலிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட பரம்வீர் சிங், உள்துறை அமைச்சராக இருந்த, தேசியவாத காங்., கட்சியைச் சேர்ந்த அனில் தேஷ்முக் மீது, சமீபத்தில் ஊழல் புகார் கூறினார்.


latest tamil news



இது தொடர்பான வழக்கை விசாரித்த, மும்பை உயர் நீதிமன்றம், அனில் தேஷ்முக் மீதான புகாரை, சி.பி.ஐ., விசாரிக்க உத்தர விட்டது. இதையடுத்து, அனில் தேஷ்முக், தான் வகித்து வந்த உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், மஹாராஷ்டிர அரசும், அனில் தேஷ்முக்கும், மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு, நீதிபதிகள் சஞ்சய் கவுல், ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், இன்று விசாரணைக்கு வருகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X