அரசியல் செய்தி

தமிழ்நாடு

நிலக்கோட்டை கட்சித்தொண்டர்கள் குழப்பம்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
நிலக்கோட்டை : நிலக்கோட்டை தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க.,வினர் யாருக்கு வெற்றி வாய்ப்பு என குழப்பத்தில் உள்ளனர். தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., போட்டியிட்டாலும் நேரடி போட்டி தி.மு.க. அ.தி.மு.க.,விற்கு தான்.தொகுதியை தக்க வைக்க அ.தி.மு.க., தி.மு.க., கட்சிகள் பணப்பட்டுவாடாவில் தீவிரம் காட்டின. ஒரு தரப்பில் நிலக்கோட்டை

நிலக்கோட்டை : நிலக்கோட்டை தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க.,வினர் யாருக்கு வெற்றி வாய்ப்பு என குழப்பத்தில் உள்ளனர்.

தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., போட்டியிட்டாலும் நேரடி போட்டி தி.மு.க. அ.தி.மு.க.,விற்கு தான்.தொகுதியை தக்க வைக்க அ.தி.மு.க., தி.மு.க., கட்சிகள் பணப்பட்டுவாடாவில் தீவிரம் காட்டின. ஒரு தரப்பில் நிலக்கோட்டை ஒன்றியத்தில் மட்டும் ஓட்டுக்கு ரூ.100 வழங்கிய நிலையில், மற்றொரு தரப்பு ரூ. 500 வழங்கியது. இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி புதிய வாக்காளர்களை கவர்ந்திருப்பது தெரிந்தது.

அ.ம.மு.க., கூட்டணி வேட்பாளர் பிரசாரத்திற்கு வராததால் அக்கட்சியினர் பலரை, ஆளும் தரப்பு 'கவர்ந்து' விட்டதாகவும், தி.மு.க.,வுக்கு சிறுபான்மையினர் மற்றும் பிறகட்சிகளின் அதிருப்தி ஓட்டுகள் கிடைத்துள்ளதாகவும் அந்தந்த கட்சியினர் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். இருபக்கமும் சரி விகிதத்தில் ஓட்டுகள் பதிவானதால் யாருக்கு வெற்றி என கணிக்க முடியாத நிலையில் தொண்டர்கள் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X