ஆத்துார் : 'ஆத்துார் தேர்தல் பிரச்னைகள் தொடர்பாக கோர்ட்டில் முறையிட கட்சி மேலிட அனுமதியை எதிர்பார்த்துள்ளதாக, பா.ம.க., வேட்பாளர் திலகபாமா கூறினார்.
ஆத்துார் தொகுதி சின்னாளபட்டி ஓட்டுச்சாவடி முன்பு, பணம் பட்டுவாடா செய்த 3 பெண்களை பறக்கும் படையினர் கையும் களவுமாக பிடித்தனர். 25 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, இரு தரப்பு தள்ளுமுள்ளு, பா.ம.க., வேட்பாளருக்கு கொலைமிரட்டல், ரோடு மறியல் சம்பவங்கள் நடந்தன.சில ஓட்டுச்சாவடிகளில் இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை குளறுபடி புகார்கள் தொடர்ந்தன. கன்னிவாடியில் இறந்தவர் பெயரில் ஓட்டு பதிவு, சுரைக்காபட்டியில் மாம்பழ சின்னத்தை ஸ்டிக்கரால் மறைத்த சம்பவங்கள் அரங்கேறின.
பா.ம.க., வேட்பாளர் திலகபாமா கூறுகையில், ''தேர்தல் சம்பவங்கள் தொடர்பாக போலீசாரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. இறந்தவர் ஓட்டை பதிவு செய்த அதிகாரிகள், கள்ள ஓட்டு, இயந்திர எண்ணிக்கை குளறுபடி குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்துள்ளோம். மறுதேர்தல் தொடர்பாக கோர்ட்டில் முறையிடுவதற்கு, கட்சி மேலிட உத்தரவைப் பொறுத்தே செயல்படுவோம்'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE