அரசியல் செய்தி

தமிழ்நாடு

இதிலுமா ஸ்டாலின் ஸ்டிக்கர்! அவிநாசியில் எழுந்தது எதிர்ப்பு

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
அவிநாசி:அவிநாசி - அத்திக்கடவு திட்ட போராட்ட கூட்டமைப்பு பெயர் பலகை மீது, ஸ்டாலின் படத்துடனான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின், 60 ஆண்டு கால எதிர்பார்ப்பான, அத்திக்கடவு - - அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, திட்டம் பயன்பெறும் கிராமங்களில், போராட்டக்குழு கூட்டமைப்பு சார்பில், பெயர் பலகைகள், கடந்த சில
 இதிலுமா ஸ்டாலின் ஸ்டிக்கர்! அவிநாசியில் எழுந்தது எதிர்ப்பு

அவிநாசி:அவிநாசி - அத்திக்கடவு திட்ட போராட்ட கூட்டமைப்பு பெயர் பலகை மீது, ஸ்டாலின் படத்துடனான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின், 60 ஆண்டு கால எதிர்பார்ப்பான, அத்திக்கடவு - - அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, திட்டம் பயன்பெறும் கிராமங்களில், போராட்டக்குழு கூட்டமைப்பு சார்பில், பெயர் பலகைகள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், நிறுவப்பட்டன.அ.தி.மு.க., அரசு, திட்டத்துக்கென நிதி ஒதுக்கி, தற்போது பணி வேகமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில், அவிநாசி அருகே, நம்பியூர், நாலுகால்சாவடி பகுதியில் வைக்கப்பட்டுள்ள பலகையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் படத்துடன் கூடிய, 'ஸ்டாலின் தான் வாராரு; விடியல் தர போறாரு' என்ற வாசகத்துடனான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.கூட்டமைப்பினர் கூறுகையில், 'பெயர் பலகை, அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தப்பட்டதில்லை. தற்போது, இத்திட்டத்தில், 80 சதவீத பணி முழுமை பெற்ற நிலையில், பெயர் பலகை மீது தி.மு.க.,வினர் ஸ்டிக்கர் ஒட்டியிருப்பது கண்டனத்திற்குரியது' என்றனர்.-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X