விவசாயி பலிவிக்கிரமங்கலம்: கோலக்காபட்டி அருவராஜ் 55, விவசாயி. ஏப்.,6 மாலை டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) மனைவி உடன் விக்கிரமங்கலம்- உசிலம்பட்டி மெயின் ரோட்டில் வளைந்தார். கணவாய் நோக்கி சென்ற கார் மோதியதில் அருவராஜ் இறந்தார். மனைவி கொடியம்மாள் சிகிச்சை பெறுகிறார்.போலீசார் விசாரிக்கின்றனர்.வியாபாரி பலிகொட்டாம்பட்டி: சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை பழைய இரும்பு வியாபாரி பழனியப்பன் 50. நேற்று காலை சைக்கிளில் கொட்டாம்பட்டி பள்ளபட்டி நான்கு வழிச்சாலையில் சென்ற போது பின்னால் அருப்புக்கோட்டை - திருச்சி சென்ற கார் மோதி இறந்தார். அருப்புகோட்டை டிரைவர் பிரசன்ன பாலாஜியிடம் 28, போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE