கொடைக்கானல் : கொடைக்கானலில் சிலநாட்களாக பிளம்ஸ் 'ஆப் சீசன்' துவங்கியுள்ளது.
கடந்த மாதம் பூக்கத் துவங்கியதும் மலைப்பகுதி முழுமையும் வெண் கம்பளம் விரித்தது போன்று காட்சியளித்தது. தற்போது கோடை கால துவக்கத்தில் பூத்த பூக்கள் காய் பருவத்தை எட்டி, ஆப் சீசனில் பழுக்க துவங்கியுள்ளன.தற்போது மலைப்பகுதியில் சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு பறவைகளுக்கு உணவாக பயன்படுகின்றன. பெரிய அளவில் பழங்கள் அறுவடை ஆகாத சூழலில் வியாபாரிகள் நாளுக்கொரு விலை என நிர்ணயம் செய்கின்றனர்.மே மாதம் சீசன் துவங்கி ஜூலை வரை முழு வீச்சில் பழங்கள் பழுக்க துவங்கும். கடந்தாண்டு கொரோனா ஊரடங்கால் கேரளா, ஆந்திரா, பெங்களூரு பகுதிக்கு பழங்கள் செல்லாமல் உள்ளுர் மார்க்கெட்டில் கிலோ ரூ. 50 வரை விற்றது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE