பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு இயந்திர அறைக்கு இருமுறை சீல்வைப்பு

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
மூணாறு : கேரளா தேவிகுளம் தொகுதி மூணாறில் ஓட்டுக்கள் பதிவான மின்னணு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் அறை இரண்டு முறை சீல் வைக்கப்பட்டது.இத்தொகுதியில் மூணாறு அருகே அடர்ந்த வனத்தினுள் மலைவாழ் மக்கள் மட்டும் வசிக்கும் இடமலைகுடி ஊராட்சி உள்ளது. அங்கு செல்ல ரோடு வசதி சரிவர இல்லை என்பதால் குறிப்பிட்ட பகுதி வரை அதிக உந்து சக்தி கொண்ட ஜீப்புகள் மட்டும் செல்கின்றன. வன

மூணாறு : கேரளா தேவிகுளம் தொகுதி மூணாறில் ஓட்டுக்கள் பதிவான மின்னணு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் அறை இரண்டு முறை சீல் வைக்கப்பட்டது.இத்தொகுதியில் மூணாறு அருகே அடர்ந்த வனத்தினுள் மலைவாழ் மக்கள் மட்டும் வசிக்கும் இடமலைகுடி ஊராட்சி உள்ளது.

அங்கு செல்ல ரோடு வசதி சரிவர இல்லை என்பதால் குறிப்பிட்ட பகுதி வரை அதிக உந்து சக்தி கொண்ட ஜீப்புகள் மட்டும் செல்கின்றன. வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம் காணப்படும். ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுப்பதிவுக்கு மறு தினம் ஊழியர்கள் வந்து சேருவர்.அதன்படி இடமலைகுடி ஊராட்சியில் உள்ள நான்கு ஓட்டுசாவடிகளில் நேற்று முன்தினம் தேர்தல் பணிக்குச் சென்றவர்கள் நேற்று பகல் 12:15 மணிக்கு மூணாறில் மின்னணு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் பொறியியல் கல்லுாரிக்கு வந்தனர்.

அந்த அறை ஏற்கனவே நேற்றுமுன்தினம் நள்ளிரவு 2:30 மணிக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் நேற்று மீண்டும் திறக்கப்பட்டு தேர்தல் பார்வையாளர் நரேந்திரகுமார்பென்ஷிலால், தேர்தல் அதிகாரி பிரேம்கிருஷ்ணன், காங்., கூட்டணி வேட்பாளர் குமார் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் சீல் வைக்கப்பட்டது. அறைமுன் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.---------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X