சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கண்மாய் தண்ணீரில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
கூடலூர் : கூடலூர் ஒட்டான்குளம் கண்மாய் கரையை சீரமைக்கக்கோரி விவசாயிகள் தண்ணீருக்குள் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.இக்கண்மாய் கரையில் இரண்டு இடங்களில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் திறந்து விடும் ஷட்டர் பகுதி சேதமடைந்துள்ளது. கரைப்பகுதி முழுவதும் மதுபாட்டில்கள் அதிகமாக வீசப்பட்டுள்ளன. கோழிக்கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் தண்ணீருக்குள்

கூடலூர் : கூடலூர் ஒட்டான்குளம் கண்மாய் கரையை சீரமைக்கக்கோரி விவசாயிகள் தண்ணீருக்குள் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர்.இக்கண்மாய் கரையில் இரண்டு இடங்களில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் திறந்து விடும் ஷட்டர் பகுதி சேதமடைந்துள்ளது. கரைப்பகுதி முழுவதும் மதுபாட்டில்கள் அதிகமாக வீசப்பட்டுள்ளன. கோழிக்கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் தண்ணீருக்குள் கொட்டப்படுகிறது. இவை அனைத்திற்கும் நடவடிக்கை எடுக்கக்கோரி முல்லைச்சாரல் விவசாய சங்க தலைவர் கொடியரசன், செயலாளர் தெய்வேந்திரன், பொருளாளர் ஜெயபால், நிர்வாகிகள் சதீஷ் பாபு, ஜெகன், அறிவழகன், சங்கர், ஆசைக்காளை, கபேஸ் ஆகியோர் கண்மாயில் தண்ணீருக்குள் இறங்கி நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர். காலை 10:00 மணியிலிருந்து தொடர்ந்து ஐந்து மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. பொதுப்பணித்துறையினர், போலீசார், நகராட்சி அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

விரைவில் இதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. இதில் விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது,.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X