இம்மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஆண்டிபட்டி, பெரியகுளம்(தனி), போடி, கம்பம் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளில் 1561 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. மொத்தம் 72.60 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின.
இரவு 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் சீல்' வைக்கப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் 155 மொபைல் வாகன குழுக்கள் மூலம் ஓட்டு எண்ணிக்கை மையமான கொடுவிலார்பட்டி கம்மவார் சங்கம் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டன. போடி தொகுதி காரிபட்டி ஓட்டுச்சாவடியில் இருந்து முதலாவதாக நேற்று முன்தினம் நள்ளிரவு 11:30 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு இயந்திரம் வந்தது. அதன்பின் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. நேற்று காலை 6:00 மணிக்கு கம்பம் தொகுதி ஆணைமலையான்பட்டி ஓட்டுச்சாவடியில் இருந்து கடைசியாக இயந்திரங்கள் வந்தன.
12 அறைகள்கம்பம், போடி தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் கல்லுாரி கட்டடத்தில் உள்ள முதல், இரண்டாவது தளத்தில் அமைக்கப்பட்ட 6 ஸ்ட்ராங் ரூம்'களில் வைக்கப்பட்டுள்ளன. ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி) தொகுதி ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பொறியியல் கல்லுாரி பின்புறம் உள்ள கட்டடத்தில் முதல், இரண்டாவது தளத்தில் வைக்கப்பட்டு உள்ளன.
ஒரு தொகுதிக்கு தலா ஒரு தபால் ஓட்டுக்கள் உள்ள அறை, 2 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறை என 12 அறைகள் மாவட்ட தேர்தல் அலுவலர் கிருஷ்ணனுண்ணி, சாய்சரண்தேஜஸ்வி எஸ்.பி., தொகுதி தேர்தல் அலுவலர்கள், அரசியல் கட்சி வேட்பாளர்களின் பிரதிநிதிகள், சுயேச்சை வேட்பாளர்களின் முன்னிலையில் பூட்டி சீல்' வைக்கப்பட்டன. துணை ராணுவத்தினர், போலீசார் என மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. சங்கரன் ஏ.டி.எஸ்.பி., தலைமையில் 325 பேர் சுழற்சி முறையில் இப்பணியில் ஈடுபடுகின்றனர்.
வாக்குவாதம்சீல் வைத்து முடித்தபின் போடி தி.மு.க., வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன் இங்குவந்தார். நான் இல்லாமல் சீல்' எப்படி வைக்கலாம். உள்ளே என்ன இருக்கிறது' என எனக்கு எப்படித் தெரியும். சீல் வைத்த அறையை திறக்க வேண்டும் என' அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கண்காணிப்பு கேமரா மூலம் இயந்திரங்கள், தபால் ஓட்டுப்பெட்டிகளை எப்போதுவேண்டுமானாலும் பார்க்கும் வசதி உள்ளது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர், எஸ்.பி., விளக்கினர். சீல்' வைக்கப்பட்டபோது உங்களுடைய பிரதிநிதிகள் வந்திருந்தனர் எனக் கூறப்பட்ட பின் சமாதானம் அடைந்தார். போடி தொகுதியின் 3 அறைகளில் வைக்கப்பட்ட சீல்'களுக்கு மேல் தாங்கள் கொண்டு வந்த அரக்கு' மூலம் சீல்'களை வைத்து ஆதரவாளர்களுடன் சென்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE