கேரளாவில் 10, 12ம் வகுப்பு தேர்வு இன்று துவக்கம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கேரளாவில் 10, 12ம் வகுப்பு தேர்வு இன்று துவக்கம்

Added : ஏப் 08, 2021
Share
பாலக்காடு:கேரளாவில், 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் இன்று துவங்குகின்றன.சட்டசபை தேர்தல் நடப்பதற்காக ஒத்திவைக்கப்பட்டிருந்த, 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. பாலக்காடு மாவட்டத்தில், 196 மையங்களில், 38 ஆயிரத்து 985 மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர். மாவட்டத்தில், 246 மையங்களில், 31 ஆயிரத்து 352 மாணவர்கள், 12ம் வகுப்பு தேர்வு

பாலக்காடு:கேரளாவில், 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் இன்று துவங்குகின்றன.சட்டசபை தேர்தல் நடப்பதற்காக ஒத்திவைக்கப்பட்டிருந்த, 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.

பாலக்காடு மாவட்டத்தில், 196 மையங்களில், 38 ஆயிரத்து 985 மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர். மாவட்டத்தில், 246 மையங்களில், 31 ஆயிரத்து 352 மாணவர்கள், 12ம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். கொரோனா தொற்று பரவல் தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறை பின்பற்றி அரசு தேர்வுகளை நடத்துகிறது. வரும், 29ம் தேதி தேர்வுகள் முடிவடைகின்றன.

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணன் கூறுகையில், ''சானிடைசர், முகக் கவசம், கையுறை, சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்படும். ஒரு பெஞ்சில், இரண்டு மாணவர்கள் மட்டும் அமர்த்தப்படுவர்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X