பொது செய்தி

தமிழ்நாடு

விளையாட்டுப்போட்டியில் வெற்றி கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
தேனி : அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரிகளுக்கு இடையிலான 17 வது மண்டல செஸ், - இறகுப்பந்து விளையாட்டுப் போட்டிகள் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரியில் நடந்தது. திண்டுக்கல், கரூர், விருதுநகர், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த பொறியியல் கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நான்கு சுற்றுகளாக நடந்த செஸ்' போட்டியில் தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி மாணவர்கள் 7

தேனி : அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரிகளுக்கு இடையிலான 17 வது மண்டல செஸ், - இறகுப்பந்து விளையாட்டுப் போட்டிகள் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரியில் நடந்தது.

திண்டுக்கல், கரூர், விருதுநகர், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த பொறியியல் கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நான்கு சுற்றுகளாக நடந்த செஸ்' போட்டியில் தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி மாணவர்கள் 7 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடம் பெற்றனர். 'நாக் - அவுட்' முறையில் நடந்த இறகுபந்து போட்டியில் நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி மாணவிகள் இரண்டாம் இடம் பெற்று பதக்கம், பரிசுக் கோப்பையை வென்றனர்.

வெற்றி பெற்றவர்களை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத் தலைவர் முருகன், பொதுச் செயலாளர் ராஜமோகன், பொருளாளர் பழனியப்பன், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், கல்லுாரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள், கல்லுாரிச் செயலாளர் காசிபிரபு, இணைச் செயலாளர் ராஜ்குமார், முதல்வர் மதளைசுந்தரம், துணை முதல்வர் மாதவன், கல்லுாரி பெண்கள் உரிமை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சரண்யா, உடற்கல்வி இயக்குனர்கள் சுந்தரராஜன், செல்வக்குமார், மாலினி பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X