பொது செய்தி

தமிழ்நாடு

150 கேமரா கண்காணிப்பில் ஓட்டு எண்ணும் மையம்! பாதுகாப்பு பணியில் 300 பேர்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாவட்டத்தில், ஓட்டு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் ஜி.சி.டி., பொறியியல் கல்லுாரி வளாகம், 150 'சிசிடிவி' கேமராக்களால் கண்காணிக்கப்படுகிறது.கோவை மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகளில் ஓட்டுப்பதிவு செய்த மின்னணு இயந்திரங்கள், ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் அனைத்தும், தடாகம் ரோடு, ஜி.சி.டி., அரசு பொறியியல் கல்லுாரி வளாகத்துக்கு நேற்று முன்தினம் இரவு கொண்டு
 150 கேமரா கண்காணிப்பில் ஓட்டு எண்ணும் மையம்! பாதுகாப்பு பணியில் 300 பேர்

கோவை:கோவை மாவட்டத்தில், ஓட்டு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் ஜி.சி.டி., பொறியியல் கல்லுாரி வளாகம், 150 'சிசிடிவி' கேமராக்களால் கண்காணிக்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகளில் ஓட்டுப்பதிவு செய்த மின்னணு இயந்திரங்கள், ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் அனைத்தும், தடாகம் ரோடு, ஜி.சி.டி., அரசு பொறியியல் கல்லுாரி வளாகத்துக்கு நேற்று முன்தினம் இரவு கொண்டு வரப்பட்டன. உரிய பாதுகாப்பு அறைகளில், ஓட்டுச்சாவடி எண் வரிசைப்படி இயந்திரங்கள் வைக்கப்பட்டன.

ஓட்டு இயந்திரங்கள் இருக்கும் அறைகள் அனைத்தும், வேட்பாளர்களின் ஏஜன்ட்கள், தேர்தல் பார்வையாளர்கள், மாவட்ட கலெக்டர், போலீஸ் கமிஷனர் முன்னிலையில் நேற்று பூட்டி சீல் வைக்கப்பட்டன.அனைத்து பாதுகாப்பு அறைகள், கல்லுாரி வளாகம் முழுவதும், 150 'சிசிடிவி' கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான, மாஸ்டர் கன்ட்ரோல் ரூம், ஜி.சி.டி., கல்லுாரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள பிரமாண்ட 'டிவி' திரைகளில், 150 கேமராக்களில் படம் பிடிக்கப்படும் காட்சிகளும் நேரலையாக தெரியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவற்றில் 70 கேமராக்கள், ஓட்டு இயந்திரங்கள் இருக்கும் பாதுகாப்பு அறைகளை கண்காணிக்கும். 80 கேமராக்கள், கல்லுாரி வளாகத்தை முழுவதும் கண்காணிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ளன.

மூன்றடுக்கு பாதுகாப்பில் இருக்கும் வளாகத்தில், மத்திய பாதுகாப்பு படை, மாநில போலீசார் என, 300 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.மையம் வந்த கமல்கோவையில் ஓட்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஜி.சி.டி., கல்லுாரி மையத்தை, நடிகர் கமல் நேற்று காலை, கட்சியின் முன்னணி நிர்வாகிகளுடன் வந்து பார்வையிட்டார். ஓட்டு இயந்திரங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதேபோல, வேறு சில தொகுதிகளின் வேட்பாளர்களும், ஓட்டு எண்ணிக்கை மையத்தில் ஏற்பாடுகளை பார்வையிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X