முகவரி மாறியவர்கள், இறந்தவர்கள் போன்றவர்களின் பெயர்களை எடுக்காமல் இருப்பதால் தான் வாக்காளர் எண்ணிக்கை அதிகமாகி, வாக்குப்பதிவு சதவீதம் குறைவதாக புகார் எழுந்துள்ளது.
கல்வியறிவிலும், பொருளாதாரத்திலும் சிறந்து விளங்கும் தமிழகம், வாக்குப்பதிவு சதவீதத்தில் மிகவும் பின் தங்குவது தொடர்ந்து வருகிறது. படித்த, மேல்தட்டு மக்கள் பலரும் வாக்களிக்க வராததே இதற்குக் காரணமென்று கருதப்படுகிறது. குறிப்பாக, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் சேர்ந்து வாழும் சென்னை பெருநகரத்தில்தான் வாக்குப்பதிவு சதவீதம் மிகவும் குறைவாகவுள்ளது.
அடுத்ததாக, கோவை மாவட்டத்தில் இது முறையே 75.18 சதவீதம், 68.13 சதவீதம் என குறைந்து 66.98 சதவீதமாக இப்போது பதிவாகியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 2011ல் 78.01 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு, 2016ல் 72.68 ஆகக்குறைந்து, இப்போது 67.48 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 2011ல் 71.94 சதவீதமாக இருந்த வாக்குப்பதிவு, 70.53 சதவீதமாகக் குறைந்து, இந்தத் தேர்தலில் 69.24 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.காரணம் என்ன?இந்த மாவட்டங்கள் அனைத்தும் தொழில் வளர்ச்சி நிறைந்த பகுதிகளாகும். இங்கு ஆண்டுதோறும் மக்கள்தொகை அதிகரிப்பது ஒரு புறமிருக்க, குடியிருப்புகளில் இடம் பெயர்வோரின் எண்ணிக்கையும் அதிகம். இவ்வாறு இடம் பெயர்வோர், இறப்பவர்கள் போன்றோரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் நீக்குவதில்லை; மாறாக புதிய வாக்காளர் சேர்த்தல் மட்டும் அதிகம் நடக்கிறது என்ற புகாரும் உள்ளது.
இதற்கேற்ப இந்தத் தேர்தலுக்கு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலிலேயே குடியிருப்புகள் மாறியவர்கள், இறந்தவர்கள் என பல ஆயிரம் பேர்கள், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதைப் பார்க்க முடிகிறது.முகவரி மாறியவர்களில் மிகமிகக்குறைவான சதவீதம் பேர்களே, அதற்குரிய படிவங்களைக் கொடுத்து, தங்களுடைய புதிய முகவரிகளுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் மாற்றிக் கொள்கின்றனர். இந்தக் காரணங்களால் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலும், அவர்கள் வாக்களிக்க வர இயலாத நிலை உள்ளது. இதுதான் தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதம் பெருமளவில் குறைவதற்கு முக்கியக் காரணமென்று ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
தீர்வு என்ன?
இந்த நிலையைத் தவிர்ப்பதற்கு, வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்கள் அனைத்தையும் ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டுமென்ற ஆலோசனையும் முன் வைக்கப்படுகிறது. அதேபோன்று, தற்போதுள்ள வாக்காளர் பட்டியலை அடிப்படையாக வைத்துக் கொண்டு, இந்த ஆண்டில் நடக்கவுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்த்து தமிழகத்தில் புதிய வாக்காளர் பட்டியலைத் தயாரித்தால், அடுத்த லோக்சபா தேர்தலில் நிச்சயமாக வாக்குப்பதிவு சதவீதம் 80 சதவீதத்துக்கும் அதிகமாக வாய்ப்புள்ளது. புதிதாகப் பொறுப்பேற்கும் அரசு, இதில் சிறப்புக் கவனம் செலுத்துவது அவசியம்.
-நமது சிறப்பு நிருபர்-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE