சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வண்டல் மண் கிடைக்காமல் செங்கல் சூளைகள் மூடல்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
கம்பம் : செங்கல் உற்பத்திக்கு தேவையான வண்டல் மண் கிடைக்காததால் கம்பம் பகுதியில் பெரும்பாலான சூளைகள் மூடப்பட்டுவிட்டன. இதனால் விலையும் உயர்ந்துள்ளது. கம்பம் நகரில் மட்டும் 40 க்கும் மேற்பட்ட சூளைகள் செயல்படுகின்றன. உத்தமபாளையம், சின்னமனுார், கோம்பை உள்ளிட்ட ஊர்களிலும் உள்ளன.செங்கல் உற்பத்திக்கு வண்டல், களிப்புமண், மணல் சார்ந்த மண் தேவையாகும். கனிமவளத்துறையின்

கம்பம் : செங்கல் உற்பத்திக்கு தேவையான வண்டல் மண் கிடைக்காததால் கம்பம் பகுதியில் பெரும்பாலான சூளைகள் மூடப்பட்டுவிட்டன. இதனால் விலையும் உயர்ந்துள்ளது.

கம்பம் நகரில் மட்டும் 40 க்கும் மேற்பட்ட சூளைகள் செயல்படுகின்றன. உத்தமபாளையம், சின்னமனுார், கோம்பை உள்ளிட்ட ஊர்களிலும் உள்ளன.செங்கல் உற்பத்திக்கு வண்டல், களிப்புமண், மணல் சார்ந்த மண் தேவையாகும். கனிமவளத்துறையின் அனுமதி சீட்டு பெற்று இவற்றை கம்பம் மலையடிவாரங்களில் வெட்டி எடுத்து சூளைகளுக்கு விற்பனை செய்து வந்தனர்.2020 டிசம்பருடன் அனுமதி சீட்டு காலம் முடிவடைந்துவிட்டது. புதுப்பிக்கப்படாததால் சில மாதங்களாக மூலப் பொருள்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வெளியூர்களிலிருந்து செங்கல் சூளைகளுக்கு மணல் வந்து கொண்டிருக்கிறது. 6 யூனிட் மண்ணுக்கு ரூ. 12 ஆயிரம் கட்டணமாக நிர்ணயித்துள்ளனர். அதிலும் மணல்சார்ந்த மண் மட்டுமே கிடைக்கிறது.செங்கல்சூளை உரிமையாளர் கிருஷ்ணன் கூறுகையில், '' சில மாதங்களாக மூலப்பொருள் தட்டுப்பாட்டால் செங்கல் விலையும் உயர்ந்து வருகிறது. கடந்தமாதம் ஆயிரம் கல்லிற்கு ரூ. 5 ஆயிரம் என்றிந்த செங்கல் விலை தற்போது ரூ. 6 ஆயிரத்து 800 என உயர்ந்துள்ளது.கம்பத்திற்கு மண் சப்ளை செய்ய அனுமதி சீட்டு தரப்படவில்லை.

இதனால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல செங்கல் சூளைகள் மூடப்பட்டு உள்ளன. மாவட்ட நிர்வாகம் மூலப்பொருள் கிடைக்க உதவிட வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X