பொது செய்தி

தமிழ்நாடு

கேரளாவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை துவக்கம்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
மூணாறு : கேரளாவில் கொரோனாவால் ஓராண்டு இடைவெளிக்கு பிறகு பத்தாம் வகுப்பு பொது தேர்வு நாளை துவங்குகிறது. இடுக்கி மாவட்டத்தில் தொடுபுழா கல்வி உப மாவட்டத்தில் 74 பள்ளிகளைச் சேர்ந்த 5076, கட்டப்பனை உப கல்வி மாவட்டத்தில் 85 பள்ளிகளைச் சேர்ந்த 6393 மாணவர்கள் என 11,469 பேர் தேர்வு எழுதுகின்றனர்.தேர்வு குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள்,பெற்றோர் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறும்

மூணாறு : கேரளாவில் கொரோனாவால் ஓராண்டு இடைவெளிக்கு பிறகு பத்தாம் வகுப்பு பொது தேர்வு நாளை துவங்குகிறது.

இடுக்கி மாவட்டத்தில் தொடுபுழா கல்வி உப மாவட்டத்தில் 74 பள்ளிகளைச் சேர்ந்த 5076, கட்டப்பனை உப கல்வி மாவட்டத்தில் 85 பள்ளிகளைச் சேர்ந்த 6393 மாணவர்கள் என 11,469 பேர் தேர்வு எழுதுகின்றனர்.தேர்வு குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள்,பெற்றோர் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறும் வகையில் தொடுபுழா மாவட்ட கல்வி உதவி இயக்குனர் அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி தேர்வு நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை பொது தேர்வை கருத்தில் கொண்டு பள்ளிகளில் நடத்துவதை தவிர்க்கப்பட்டது. மாவட்டத்தில் இடுக்கி தொகுதியின் ஓட்டுகள் பைனாவில் உள்ள மாதிரி உண்டு, உறைவிட உயர் நிலை பள்ளியில் எண்ணப்படுவதால் அந்த பள்ளியின் மாணவர் தங்கும் விடுதியில் 45 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் மூன்று தேர்வுகள் பகல் 1:40 மணிக்கும், மீதமுள்ள தேர்வுகள் காலை 9:45 மணிக்கும் துவங்குகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X