சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விஷம் கலந்த நீரை பருகிய 16 வெள்ளாடுகள் பலி

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
தேனி : தேனி கோட்டூர் அருகே விஷம் கலந்த நீரை குடித்த 16 வெள்ளாடுகள் செத்த நிலையில், அதே நீரை குடித்த ஆட்டின் உரிமையாளர் பாஸ்டின்துரை 28, உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கோட்டூர் ஆர்.சி., தெரு பாஸ்டின்துரை 28. அதேப்பகுதி ஆரோக்கியசாமி 50. இருவரும் ஆடுகளை வளர்கின்றனர். நேற்று தர்மாபுரி அருகே மேய்ச்சலுக்கு

தேனி : தேனி கோட்டூர் அருகே விஷம் கலந்த நீரை குடித்த 16 வெள்ளாடுகள் செத்த நிலையில், அதே நீரை குடித்த ஆட்டின் உரிமையாளர் பாஸ்டின்துரை 28, உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கோட்டூர் ஆர்.சி., தெரு பாஸ்டின்துரை 28. அதேப்பகுதி ஆரோக்கியசாமி 50. இருவரும் ஆடுகளை வளர்கின்றனர். நேற்று தர்மாபுரி அருகே மேய்ச்சலுக்கு விட்டவர்கள் அருகில் நீர் குட்டையில் ஆடுகளை குடிக்க விட்டனர். நீரைக் குடித்த 10 நிமிடத்தில் பாஸ்டின்துரையின் 10 ஆடுகளும், ஆரோக்கியசாமியின் 6 ஆடுகள் ஒன்றன் பின் ஒன்றாக வாயில் நுரைத்தள்ளியபடி பரிதாபமாக பலியாயின.தாகத்திற்காக அதே குட்டை தண்ணீரை குடித்த பாஸ்டின்துரை மயங்கினார்.

அவர் சின்னமனுார் அரசு மருத்துவமனையில் முதுலுதவி அளித்து, தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X