கொரோனா பரவல்: முதல்வர்களுடன் இன்று ஆலோசனை

Updated : ஏப் 08, 2021 | Added : ஏப் 08, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா தொற்று மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று (ஏப். 8) காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார்.இந்தியாவில் மஹாராஷ்டிரா, பஞ்சாப், தமிழகம் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள், மற்றும் டில்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த (ஏப்.,4 தேதி ஒரே நாளில் நாடு முழுவதும் ஒரு
கொரோனா,முதல்வர்கள், பிரதமர், ஆலோசனை

புதுடில்லி: கொரோனா தொற்று மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று (ஏப். 8) காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்தியாவில் மஹாராஷ்டிரா, பஞ்சாப், தமிழகம் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள், மற்றும் டில்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த (ஏப்.,4 தேதி ஒரே நாளில் நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


latest tamil news



கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், தடுப்பூசி போடுவது குறித்தும் பிரதமர் மோடி, அமைச்சரவை செயலர், பிரதமரின் முதன்மை செயலர், சுகாதார செயலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.


இந்நிலையில், இன்று (ஏப்.8) அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார். அப்போது, கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த 6-ம் தேதியன்று 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆலோசனை நடத்தினர்..

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SANKARAN NAGARAJAN - erode,இந்தியா
08-ஏப்-202112:26:12 IST Report Abuse
SANKARAN NAGARAJAN இந்த நேரத்தில் தேர்தல் வைத்து ,கூட்டம் கூட வைத்துவிட்டு இப்பொது மக்களை வீட்டுக்குள் பூட்டி வைக்க திட்டம் போடுவது எந்த விதத்தில் சேர்ப்பது . கோரோனோ பரவ இவர்கள் தான் காரணம் .
Rate this:
Cancel
Nesan - JB,மலேஷியா
08-ஏப்-202112:13:33 IST Report Abuse
Nesan உலக நாடுகளுக்கு கொரோன தடுப்பு மருந்து அனுப்பும் பிரதமர். ஆனோசனை கூறும் அறிவாளிகள். இந்தியாவில் மட்டும், கொரோனவை கட்டுப்படுத்த முடியவில்லை. வாய் சொல்லில் வீரர்கள். அரசியல் வல்லுநர்கள் கூறுவது போல் மத்தியரசின் செயல்பாடுகள் சொல்லும்படியாக இல்லை. பிரதமரின் தற்போதைய செயல்பாடுகள் பாராட்டும் படியாக இல்லை. இந்தியா எதை நோக்கி போகிறது ...????
Rate this:
Cancel
Nithya - Chennai,இந்தியா
08-ஏப்-202110:56:57 IST Report Abuse
Nithya பரப்புரை செய்ய பறந்து வந்தவங்களை ரவுண்டு கட்டி முடக்கியிருக்கணும்.. அப்போது அரசியல்வாதிகளை அடக்க முடியாது ஓட்டுக்கு மக்கள் உயிரை பணயம் வைத்தனர் இப்போ கொரோனா அதிகம்சியிடுச்சின்னு லபோதிபோ ன்னு காத்திட்டு இருக்கிறவனை வெளியே விடாமல் சாகடிப்பர் நாளைக்கி அவிங்க நம்மை ரவிண்டு கட்டி போலூசை ஏவி முடக்குவாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X