பொது செய்தி

இந்தியா

டில்லியில் இரவு நேர ஊரடங்கு திருமணங்கள் நடப்பதில் குழப்பம்

Updated : ஏப் 08, 2021 | Added : ஏப் 08, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி : கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, டில்லியில் இரவு, 10:00 மணி முதல் காலை, 5:00 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது, திருமண வீட்டார் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.டில்லியில், திருமணங்கள் இரவு நேரங்களில் நடத்தப்படுவது வழக்கம். அதிலும் பணக்காரர்கள் வீட்டு திருமணங்கள், நட்சத்திர ஓட்டல்களிலும், புறநகர்களில் உள்ள பண்ணை

புதுடில்லி : கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, டில்லியில் இரவு, 10:00 மணி முதல் காலை, 5:00 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது, திருமண வீட்டார் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.latest tamil newsடில்லியில், திருமணங்கள் இரவு நேரங்களில் நடத்தப்படுவது வழக்கம். அதிலும் பணக்காரர்கள் வீட்டு திருமணங்கள், நட்சத்திர ஓட்டல்களிலும், புறநகர்களில் உள்ள பண்ணை வீடுகளிலும், விடியவிடிய கொண்டாட்டங்களுடன் நடைபெறும். இது திருமணங்களுக்கான, 'சீசன்' என்பதால், டில்லியை சுற்றியுள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள், மண்டபங்கள் திருமணத்திற்காக முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன. அதோடு, 'வெட்டிங் பிளானர்ஸ்' என்றுஅழைக்கப்படும், திருமண ஏற்பாடுகளை செய்து தரும் நிறுவனங்கள், பம்பரமாக சுழன்று ஏற்பாடுகளை செய்து வந்தன. இந்த நேரத்தில் தான், கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைந்தது.


latest tamil newsஇதையடுத்து, திறந்தவெளி அரங்கில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில், 200 பேர், மூடிய அரங்கில், 100 பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என, டில்லி அரசு கடந்த மாத இறுதியில் உத்தரவு பிறப்பித்தது.திருமண வீட்டாருக்கு இந்த அறிவிப்பு அதிர்ச்சி தந்தாலும், மனதை தேற்றிக் கொண்டு ஏற்பாடுகளை கவனித்து வந்தனர். இந்நிலையில், டில்லி மாநில அரசு, இரவு, 10:00 மணி முதல், காலை, 5:00 மணி வரை, அதிரடியாக ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. திருமண வீட்டாரின் மிக நெருங்கிய உறவினர்கள் மட்டும், 'இ-பாஸ்' வாங்கி, திருமணத்தில் பங்கேற்கலாம் என்றும் மற்றவர்களுக்கு அனுமதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை சற்றும் எதிர்பாராத திருமண வீட்டார், பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


latest tamil newsஅனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்த நிலையில், தற்போது அனைத்தையும் மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிலர், பக்கத்து மாநிலங்களான ஹரியானாவின் குர்கான், உ.பி.,யின் நொய்டா போன்ற இடங்களில், ஓட்டல்களை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். திருணம வீட்டார் மட்டுமல்லாமல், திருமண ஏற்பாடுகளை செய்து வரும் நிறுவனங்களுக்கும், இந்த திடீர் அறிவிப்பு பெரும் பொருள் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
08-ஏப்-202113:33:05 IST Report Abuse
Mirthika Sathiamoorthi ஒரே ஒரு தொழிலை மட்டும் இங்கே சொல்றேன்? நம்மூரில் கல்யாணத்துக்கு வீடு விசேஷங்களுக்கு சமைக்கும் சமயல்காரர் இருப்பர் இப்போ ஊரடங்கில் கல்யாணம் வீடு விஷேசம் நடத்த கூடாதுன்னு சொன்னவருஷம் வீடு விஷேசங்கள்மூலம் வந்த வருமானம்? அவரின் வாழ்வாதாரத்திற்கு என்ன உத்தரவாதம்? அவரிடம் போயிகேளுங்க உயிரா மானமா? இந்தமாதிரி வாழ்க்கை நடத்தும் எத்தனைபேரிடம் நாம் இந்த கேள்வியை கேட்டருக்கோம்? ஊரடங்கு இழப்பீடா ஐநூறு வங்கிக்கணக்கில் போட்டப்ப அதை எடுக்க வங்கிமுன் கூட்டமாய் குவிந்த கூட்டத்தை பார்த்து கேக்கவேண்டியதுதானே? வெறும் ஐநூறு ரூபாய்ங்க அதுக்கு ஏன் அவ்வளவு கூட்டம் ..இதோ மகாராஷ்டிராவில் உள்ள வெளிமாநிலத்தொழிலார்கள் மூட்டை முடிச்சை கட்டிட்டு நிக்குறானுக அங்கே போயி கேட்டோமா மானமா உசுரான்னு இலவச ட்ரைன்னு விட்டோம் பஸ் விட்டோம்ன்னு அப்போ மார்தட்டுனோமே இப்போ ஒரு ட்ரைன்னும் பஸ்சம் இல்லையே? நம்மை பொறுத்தவரை இந்தியாவில் இருப்பவனெல்லாம் நம்மை போன்றே வசதியா வீட்டில் உக்காத்துகொண்டு பக்கோடா சாப்பிட்டு TV பாக்குறவங்க... அதனால் இந்த கேள்வி உயிரா மான்மா? கேட்கவேண்டியது குடும்ப பசியா? நோயா? எத்தனைபேர் நோயிதான் முக்கியம்ன்னு சொல்லுங்கன்னு நினைக்கறீங்க? பூனை எதையோ மூடிக்கிட்டு....
Rate this:
Cancel
08-ஏப்-202112:51:54 IST Report Abuse
ஆரூர் ரங் உயிரா மணமா ?🤭🤫🤔
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
08-ஏப்-202108:34:07 IST Report Abuse
a natanasabapathy Naattin janathogai athikariththu Konde selkirathu. Thirumanankalukku Oru varudam thadai vithiththu vidalaam. Corona paravalai ithu Kattupaduththum
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X