புதுச்சேரி; கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. குறிப்பாக,ரெட்டியார்பாளயைம் பகுதி, 'ஹாட் ஸ்பாட்' என அழைக்கக் கூடிய அளவில் அதிக அளவிலான கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.அதனையொட்டி, ரெட்டியார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசிமுகாமை துவக்கி வைத்தார், கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன், நிருபர்களிடம் கூறியதாவது:இதுபோன்ற தடுப்பூசி முகாம்கள்,முதலியார்பேட்டை, குயவர்பாளையம், லாஸ்பேட்டை, வில்லியனுார், மேட்டுப்பாளையம், தவளக்குப்பம் மற்றும் கோரிமேட்டில் இன்று 8 ம் தேதி துவக்கப்படும்.அதேபோல், ஓட்டல் பணியாளர்களுக்கு நாளை 9 ம் தேதி, சிறப்பு தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 6,000 ஆட்டோ தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு சிறப்பு முகாம் சனிக்கிழமை தோறும் நடத்த சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கொரோனா பரவல் 11 மாநிலங்களில் அதிகமாக உள்ளது. புதுச்சேரியிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த வியாழக்கிழமை தோறும் உயர்மட்ட குழு கூட்டம் நடக்கிறது.நேற்று முன்தினம் நடந்த சிறப்பு அவசர கூட்டத்தில், தலைமைச் செயலர், சுகாதாரத்துறை செயலர் தடுப்பு நடவடிக்கை ஆலோசனைகள் வழங்கினர்.அனைத்து தரப்பு மக்களும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தங்களது குடும்ப நலனுக்காக கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம் என்றார்.முன்னதாக, கொரோானா விழிப்புணர்வு ஆட்டோ ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE