பொது செய்தி

இந்தியா

1,245 கிலோ கொரோனா மருத்துவக் கழிவுகள்; ஓட்டுச் சாவடிகளில் இருந்து அகற்றம்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி; ஓட்டுச் சாவடிகளில் இருந்து 1,245 கிலோ மருத்துவக் கழிவுகள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பரவல் எதிரொலியாக, நேற்று முன்தினம் நடந்த ஓட்டுப் பதிவின்போது, அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.அதன் ஒரு பகுதியாக, ஓட்டளிக்க வந்த அனைவருக்கும் கையுறை இலவசமாக வழங்கப்பட்டது. மேலும், மாலை 6:00

புதுச்சேரி; ஓட்டுச் சாவடிகளில் இருந்து 1,245 கிலோ மருத்துவக் கழிவுகள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பரவல் எதிரொலியாக, நேற்று முன்தினம் நடந்த ஓட்டுப் பதிவின்போது, அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.அதன் ஒரு பகுதியாக, ஓட்டளிக்க வந்த அனைவருக்கும் கையுறை இலவசமாக வழங்கப்பட்டது. மேலும், மாலை 6:00 மணிக்கு மேல், பி.பி.இ. கிட் எனப்படும் பாதுகாப்பு உடை அணிந்து வந்து ஓட்டளிப்பதற்கு கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர்.ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்த பின், கையுறைகள், பாதுகாப்பு உடைகள் ஆகியவற்றை சேகரிக்க ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும் பிரத்யேக சேகரிப்பு தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தன.அபாயமான கொரோனா மருத்துவக் கழிவுகள் என்பதால் இவற்றை பாதுகாப்பாக அகற்றுவதற்கு சுகாதாரத் துறையும், முதன்மை தேர்தல் ஆணையர் அலுவலகமும் இணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தன.மருத்துவக் கழிவுகள் மேலாண்மை விதிமுறைகளின் அடிப்படையில் கையுறைகள், பாதுகாப்பு உடைகள் உள்ளிட்டவற்றை அகற்றும் பொறுப்பு, புதுச்சேரி திடக்கழிவு மேலாண்மை கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டது.புதுச்சேரியில் 455 இடங்களிலும், காரைக்காலில் 116 இடங்களிலும் அமைக்கப்பட்டு இருந்த 1449 ஓட்டுச் சாவடிகளில் கொரோனா மருத்துவக் கழிவுகளை அகற்றும் பணிகளை திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் மேற்கொண்டது.இதற்காக, 17 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த வாகனங்கள் சரியான பாதையில் செல்கிறதா என்பதை கண்காணிப்பதற்கு ஜி.பி.எஸ்., கருவிகள் பொருத்தப்பட்டு இருந்தன. இந்த பணியில் பயிற்சி பெற்ற ஊழியர்கள் 50 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.பயன்படுத்திய கையுறைகள், பாதுகாப்பு உடைகள் உள்ளிட்டவைகள், ஆபத்தான கொரோனா மருத்துவக் கழிவுகள் என்பதை குறிக்கும் மஞ்சள் நிற பைகளில் சேகரிக்கப்பட்டன. ஓட்டுப் பதிவு நடந்த தினத்தன்று மதியம் ஒருமுறையும், மாலையில் ஒரு முறையும் மருத்துவக் கழிவுகள் சேகரித்து அகற்றப்பட்டன.புதுச்சேரியில் 935 கிலோ, காரைக்காலில் 310 கிலோ என, மொத்தம் 1,245 கிலோ கொரோனா மருத்துவக் கழிவுகள், பொது மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த பணிகளை, சுகாதாரம், தேர்தல் துறை அதிகாரிகள் கண்காணித்தனர்.கொரோனா மருத்துவக் கழிவுகள் பொது மையத்தில் பாதுகாப்பான முறையில் எரித்து அழிக்கப்பட்டது. இவற்றை எரிக்கும்போது காற்றில் கலக்கும் மாசுக்கள் குறித்து, புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், ஆன்லைன் மூலமாக கண்காணித்தனர்.8.20 லட்சம் கையுறைகள்புதுச்சேரி முழுவதும் 81.70 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது. அதாவது, 8 லட்சத்து 20 ஆயிரத்து 446 வாக்காளர்கள் ஓட்டு போட்டுள்ளனர்.இதனடிப்படையில் பார்த்தால், 8 லட்சத்து 20 ஆயிரத்து 446 கையுறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ஓட்டுச் சாவடிகளில் பணியாற்றிய அலுவலர்களும் கையுறைகளை பயன்படுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X