காரைக்கால்; வாங்கிய புடவைக்கு தவணை தொகை வழங்காததை கேட்ட பெண்ணை ஆபாசமாக திட்டிய மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.காரைக்கால்மேடு அம்மன்கோவில்பத்து பகுதியை சேர்ந்தவர் அன்னபாக்கியம்,50; இவர், அப்பகுதியில் புடவை வியாபாரம் செய்து வருகிறார்.இவரிடம் புடவை வாங்கிய இரு பெண்கள் தவணை தொகையை வழங்கவில்லை. அதனை கேட்ட அன்னபாக்கியத்தை, இருபெண்களும், அவர்களுக்கு ஆதரவாக கோதண்டராமர் என்பவரும் சேர்ந்து ஆபாசமாக திட்டினர்.இதுகுறித்து, அன்னபாக்கியம் கொடுத்த புகாரின் பேரில் கோதண்டராமர் மற்றும் இரு பெண்கள் மீது காரைக்கால் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE