பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி சான்றிதழ் காண்பித்தால் தள்ளுபடி

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி; ஓட்டல்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்காக கொரோனா தடுப்பூசி முகாமிற்கு நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி ஓட்டல் சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் உள்ள சுகாதாரத் துறை செயலர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.சுகாதாரத் துறை செயலர் அருண் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் இயக்குனர் மோகன்குமார், புதுச்சேரி சுகாதார

புதுச்சேரி; ஓட்டல்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்காக கொரோனா தடுப்பூசி முகாமிற்கு நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி ஓட்டல் சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் உள்ள சுகாதாரத் துறை செயலர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.சுகாதாரத் துறை செயலர் அருண் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் இயக்குனர் மோகன்குமார், புதுச்சேரி சுகாதார இயக்கத்தின் இயக்குனர் ஸ்ரீராமுலு மற்றும் ஓட்டல் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் செயலர் அருண் பேசுகையில், கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருவது குறித்தும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கி கூறினார்.கொரோனா தொற்று தடுப்பில் ஓட்டல்களின் பங்களிப்பு குறித்தும் வலியுறுத்தினார்.ஓட்டல்களில் பணியாற்றும் ஊழியர்களுக்காக கொரோனா தடுப்பூசி முகாமை, கதிர்காமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நாளை (9ம் தேதி) நடத்துவது என, முடிவு செய்யப்பட்டது.கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதாக சான்றிதழ் காண்பிப்பவர்களுக்கு, தள்ளுபடி அல்லது பரிசு வழங்குவதற்கு ஓட்டல் சங்கம் முன் வர வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடைமுறைகள் சரியாக பின்பற்றப்படுவதை ஓட்டல்கள் உறுதி செய்ய வேண்டும், கொரோனா தொற்று பரவலை தடுப்பது மற்றும் தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்குவிப்பதற்கு சிறந்த ஆலோசனைகளை ஓட்டல்கள் வழங்கலாம் என, அறிவுறுத்தப்பட்டது.ஓட்டல் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்ட பின், பாதுகாப்பான ஓட்டல், பாதுகாப்பான ஊழியர் போன்ற ஸ்டிக்கர்களை ஓட்டல்களில் ஒட்டிக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.நிகழ்ச்சியில், கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஓட்டல் சங்க நிர்வாகிகளிடம், செயலர் அருண் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X