காரைக்கால்; காரைக்காலில், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்த, தி.மு.க.,வினர் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.காரைக்கால் மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு நேற்று முன்தினம் கொரோனா நோய் தொற்று பாதித்தவர்களை நலவழித்துறை பாதுகாப்பு வாகனம் மூலம் ஓட்டுச்சாவடிக்கு அழைத்துச் சென்று ஓட்டுப் போட வைத்தனர்.அதன்படி கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட, ் டூப்ளஸ் வீதியை சேர்ந்த அ.தி.மு.க., வேட்பாளர் அசனா, உரிய பாதுகாப்பு உடையுடன் ஓட்டு போட சென்றார். அவரை, அப்பகுதியை சேர்ந்த தி.மு.க.,பிரமுகர்கள் முகமது உசேன், சுலைமான் ஆகியோர் மொபைல் போனில் படம் பிடித்தனர். அதனை அ.தி.மு.க.,வினர் கண்டிக்கவே, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.அப்போது அங்கு வந்த போலீசார், அவர்களை சமரசம் செய்ய முயன்றனர். அதில் ஆத்திரமடைந்த தி.மு.க.,வினர், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து தகராறு செய்தனர்.இதுகுறித்த புகாரின்பேரில், தி.மு.க., பிரமுகர்களான முகமது உசேன், சுலைமான் ஆகியோர் மீது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக காரைக்கால் நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE