அரியாங்குப்பம்; மணவெளி ஓட்டுச்சாவடி அருகே காங்., சின்னம் அச்சிட்ட துண்டு சீட்டு வீசி சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி சட்டசபை தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. மணவெளி தொகுதியில், மணவெளி அரசு ஆரம்ப பள்ளி ஓட்டுச்சாவடியில், ஓட்டுப்பதிவு நடந்தது.ஓட்டுச்சாவடியில் இருந்து 100 மீட்டர் துாரத்திற்குள், வாக்காளர்களின் வாகனங்களை போலீசார் அனுமதிக்கவில்லை.ஆனால், ஓட்டுச்சாவடி அருகே, முக்கிய கட்சி வேட்பாளர்கள் நின்று, வாக்காளர்களை தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஓட்டுபோட கூறி வலியுறுத்தியதுடன், கட்சியின் சின்னம் பொறித்த துண்டு சீட்டுகளையும் கொடுத்து அனுப்பினர்.ஓட்டுச்சாவடி அருகே காங்., கட்சி சின்னம் பொறித்த துண்டு சீட்டுகளும் வீசப்பட்டு இருந்தது.இதை அறிந்த தேர்தல் பறக்கும்படை அதிகாரி பழனிவேல், அடையாளம் தெரியாத நபர், காங்., கட்சியின் சின்னம் பொறித்த துண்டு சீட்டுகளை, ஓட்டுச்சாவடி அருகே வீசி சென்றதாக, அரியாங்குப்பம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், குற்றவியல் நடைமுறைச்சட்டம் 130 பிரிவின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE