வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி; தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக, வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் கொடுக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு நடந்தபோது, காலாப்பட்டு தொகுதியை சேர்ந்த சஞ்சீவி நகரில் தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்குவதாக புகார் எழுந்தது. அதன்பேரில், தேர்தல் பறக்கும்படை அதிகாரி ராமன் தலைமையிலான குழுவினர், சம்பவ

புதுச்சேரி; தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக, வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் கொடுக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு நடந்தபோது, காலாப்பட்டு தொகுதியை சேர்ந்த சஞ்சீவி நகரில் தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்குவதாக புகார் எழுந்தது. அதன்பேரில், தேர்தல் பறக்கும்படை அதிகாரி ராமன் தலைமையிலான குழுவினர், சம்பவ இடத்திற்கு சென்றபோது, தப்பியோடிய வானுார், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்த சதிஷ்குமார், என்பரை பிடித்தது சோதனை செய்தனர். அவரிடம், 11 பரிசு கூப்பன் இருந்தது. அதனையொட்டி, பிடிபட்ட நபரை, பரிசு கூப்பனுடன் கோரிமேடு போலீசில் ஒப்படைத்தனர்.அதன்பேரில், போலீசார் 102 பிரிவின் கீழ் வழக்கு பதிந்து சதிஷ்குமாரை கைது செய்து விசாரித்துவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X