புதுச்சேரி; முத்தியால்பேட்டை காங்., பிரமுகர் கொலை வழக்கில் ஜாமீன் பெற்ற மூன்று ரவுடிகள், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.முத்தியால்பேட்டை, சின்னையாபுரத்தை சேர்ந்தவர் கணேசன்,54; கதர் வாரிய துணை முதன்மை செயலரான இவர், கடந்த செப்டம்பர் 7ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார்.இதுதொடர்பாக, வைத்திக்குப்பம் கட்டசெந்தில் (எ) முனீஸ்வரன்,36; வாழைக்குளம், பழனி கிராமணி தோட்டம் வெங்கடேஷ்,33; அரவிந்த்,29; முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகர் அஜய்,28; குருசுக்குப்பம் ஜான்,28; ஆனந்து,38; உள்ளிட்ட 11 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.அவர்களில், கட்ட செந்தில், அரவிந்த், வெங்கடேஷ் ஆகிய மூவரும் ஜாமீன் கோரி, புதுச்சேரி நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், மூவருக்கும் கடந்த 5ம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது.இந்நிலையில்,முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயடன் பரிந்துரையை ஏற்று, ரவுடிகள் மூவரின் நடவடிக்கையை தடுக்கம் பொருட்டு, அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் நேற்று முன் தினம் உத்தரவிட்டார்.அதன்பேரில், சிறையில் இருந்து வெளியே வர இருந்த ரவுடிகள் மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையை, சிறை நிர்வாகத்திடம் வழங்கி, மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE