எஸ்.ஐ., பெயரில் போலி பேஸ்புக் கணக்கு துவக்கி மோசடி முயற்சி

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி; புதுச்சேரியில் சப் இன்ஸ்பெக்டர் பெயரில் போலி பேஸ்புக் பக்கம் துவக்கி, பணம் பறிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் போலீஸ் அதிகாரிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் பெயரில் போலியான பேஸ்புக் முகவரி உருவாக்கி, சம்பந்தப்பட்ட அதிகாரியின் நண்பர்ளுக்கு, அவசரமாக பணம் தேவை என குறுந்தகவல் அனுப்பி, கூகுல் பே, போன் பே மூலம் பணம்

புதுச்சேரி; புதுச்சேரியில் சப் இன்ஸ்பெக்டர் பெயரில் போலி பேஸ்புக் பக்கம் துவக்கி, பணம் பறிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் போலீஸ் அதிகாரிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் பெயரில் போலியான பேஸ்புக் முகவரி உருவாக்கி, சம்பந்தப்பட்ட அதிகாரியின் நண்பர்ளுக்கு, அவசரமாக பணம் தேவை என குறுந்தகவல் அனுப்பி, கூகுல் பே, போன் பே மூலம் பணம் பறிக்கப்பட்டு வருகிறது.அதன்படி, இன்ஸ்பெக்டர் இனியன், போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், முன்னாள் ராணுவ வீரர் முருகையன் உள்ளிட்டோரின் பெயரில் போலி பேஸ்புக் முகவரி உருவாக்கி பணம் பறிக்கப்பட்டுள்ளது.தற்போது திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் குமரவேல் பெயரில், போலி பேஸ்புக் முகவரி உருவாக்கி அதில் பணம் கேட்கும் செயல் அரங்கேறியுள்ளது.இதை கண்டுபிடித்த சப் இன்ஸ்பெக்டர் குமரவேல், தனது உண்மையான பேஸ்புக் பக்கத்தில், தன் பெயரில் போலி பேஸ்புக் முகவரி உருவாக்கி பணம் பறிக்கப்படுகிறது. யாரும் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை செய்துள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட போலி பேஸ்புக் முகவரி உருவாக்கிய நபரிடமே, தான் யார் என்பதை பதிவிட்டு எச்சரிக்கை செய்துள்ளார்.போலி பேஸ்புக் முகவரியை முடக்க, சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X