சுயேட்சைக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட கொத்தனாருக்கு கத்தி வெட்டு

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி; சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்த கொத்தனார் மற்றும் அவரது மகன், மகளை தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி பூமியான்பேட்டை, பாவாணர் நகரைச் சேர்ந்தவர் சஞ்சய்காந்தி, 40; கொத்தனார். இவர், நேற்று முன்தினம் மாலை, அத்தொகுதியின் சுயேட்சை வேட்பாளர் சிவசங்கரனை ஆதரித்து, ஓட்டு சேகரித்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஆதி, 27; சஞ்சய்

புதுச்சேரி; சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்த கொத்தனார் மற்றும் அவரது மகன், மகளை தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி பூமியான்பேட்டை, பாவாணர் நகரைச் சேர்ந்தவர் சஞ்சய்காந்தி, 40; கொத்தனார். இவர், நேற்று முன்தினம் மாலை, அத்தொகுதியின் சுயேட்சை வேட்பாளர் சிவசங்கரனை ஆதரித்து, ஓட்டு சேகரித்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஆதி, 27; சஞ்சய் காந்தியை தாக்கி, ஓட்டு கேட்கக்கூடாது என விரட்டினார்.ஒரு மணிநேரம் கழித்து சஞ்சய்காந்தி மீண்டும் அதே பகுதியில் ஓட்டு கேட்டார். அதை பார்த்த ஆதி, கத்தியால் சஞ்சய்காந்தியை வெட்டினார். அதனை தடுக்க முயன்ற சஞ்சய் காந்தியின் மகள் பொற்கிளை, மகன் சந்தோஷ் ஆகியோரையும், ஆதி மற்றும் அவரது தந்தை ஆறுமுகம், நண்பர்கள் விஜயபாரதி, தினேஷ் ஆகிய நால்வரும், கை மற்றும் கற்கலால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச் சென்றனர்.காயமடைந்த மூவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து சஞ்சய்காந்தி அளித்த புகாரின்பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் கொலை மிரட்டல், கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிந்து ஆதி உள்ளிட்ட நான்கு பேரை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X