ரூ.61.52 லட்சம் மதிப்பு மதுபானம் பறிமுதல்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி; புதுச்சேரியில் தேர்தலையொட்டி நடந்த சோதனையில் ரூ. 61.52 லட்சம் மதிப்புள்ள மதுபானம் பறிமுதல் செய்துள்ளதாக கலால் துறை தெரிவித்துள்ளது.புதுச்சேரியில் தேர்தல் அறிவித்த பிப். 26ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. அன்று முதல் மதுபான விற்பனை தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை கலால் துறை விதித்தது. அதனை மீறி மதுபானம் விற்ற கடைகள் மீது நடவடிக்கை

புதுச்சேரி; புதுச்சேரியில் தேர்தலையொட்டி நடந்த சோதனையில் ரூ. 61.52 லட்சம் மதிப்புள்ள மதுபானம் பறிமுதல் செய்துள்ளதாக கலால் துறை தெரிவித்துள்ளது.புதுச்சேரியில் தேர்தல் அறிவித்த பிப். 26ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. அன்று முதல் மதுபான விற்பனை தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை கலால் துறை விதித்தது. அதனை மீறி மதுபானம் விற்ற கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.அதன்படி, ஓட்டுப்பதிவு நடந்த நேற்று முன்தினம் 6ம் தேதி வரை, புதுச்சேரியில் 4,381 லிட்டர் விஸ்கி, பிராந்தி மதுபானங்களும், 2456 லிட்டர் பீர், 28,716 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 61,52,078 ஆகும். இதுதொடர்பாக 219 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 227 பேர் கைது செய்யப்பட்டனர். 1869 முறை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ. 12,77,200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.மேலும், விதியை மீறி இயங்கிய 6 சுற்றுலா பிரிவு மதுபான பார், 1 சில்லரை மதுபான விற்பனை கடை, ஒரு சாராய கடையின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.இத்தகவலை கலால் துறை துணை ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X