பொது செய்தி

இந்தியா

கதிர்காமம் மருத்துவமனையில் பொது பிரிவு மூடல்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி; கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், கொரோனா பிரிவு தவிர்த்த பிற சேவை பிரிவுகள் நேற்று முதல் மூடுவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.புதுச்சேரியில் கடந்தாண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவல் அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து, கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கொரோனா பிரிவாக மாற்றப்பட்டது. பிற மருத்துவ

புதுச்சேரி; கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், கொரோனா பிரிவு தவிர்த்த பிற சேவை பிரிவுகள் நேற்று முதல் மூடுவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.புதுச்சேரியில் கடந்தாண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவல் அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து, கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கொரோனா பிரிவாக மாற்றப்பட்டது. பிற மருத்துவ சேவை பிரிவுகள் அனைத்தும் மூடப்பட்டன.கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்தது. இதனால், மூடப்பட்ட பிற மருத்துவ சேவை பிரிவுகள் செயல்பட துவங்கின.இந்நிலையில், கடந்த சில தினங்களாக மீண்டும் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதனால், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், கொரோனா பிரிவு தவிர மற்ற பிரிவுகள் நேற்று முதல் மூடப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X