பொது செய்தி

இந்தியா

சுகாதார நிலைய மருத்துவர்களுடன் கவர்னர் தமிழிசை ஆலோசனை

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி; ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரிகளுடன், கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை தடுத்திட அதிகாரிகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் நேற்று, ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருத்துவ அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம்

புதுச்சேரி; ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரிகளுடன், கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை தடுத்திட அதிகாரிகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் நேற்று, ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருத்துவ அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.அப்போது, கவர்னர், மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் மற்றும் தடுப்பூசி கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து கேட்டறிந்தார்.தொடர்ந்து அவர் பேசுகையில், தடுப்பூசி முகாம் மட்டுமில்லாது, அன்றாட நோயாளிகளையும் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா தடுப்பூசி நோய் பரவலின் தீவிரத்தை குறைக்கும். எனவே தடுப்பூசி முகாம்களை திட்டமிட்டு நேர்த்தியாக அதிகரிக்க வேண்டும்.மேலும், மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டும். குறைவான நேரத்தில் அதிக தடுப்பூசி போடும் வகையில் அணுகுமுறை இருக்க வேண்டும். மருத்துவமனைகளில் முக கவசம், சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க உத்தரவிட்டார்.கூட்டத்தில் சுகாதாரத் துறை செயலர் அருண், இயக்குனர் மோகன் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X