பொது செய்தி

தமிழ்நாடு

நான்கு தொகுதிகளின் 'ஸ்ட்ராங் ரூம்'களுக்கு வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் வைப்பு

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி ஓட்டு எண்ணும் மையத்தில் நான்கு தொகுதிகளின் 'ஸ்ட்ராங் ரூம்'களுக்கு வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் 'சீல்' வைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், உளுந்துார்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி(தனி) ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளது. தேர்தலுக்கு

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி ஓட்டு எண்ணும் மையத்தில் நான்கு தொகுதிகளின் 'ஸ்ட்ராங் ரூம்'களுக்கு வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் 'சீல்' வைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், உளுந்துார்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி(தனி) ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளது. தேர்தலுக்கு பிறகு அந்தந்த ஓட்டு சாவடிகளிலிருந்து பதிவான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் அனைத்தும் நேற்று முன்தினம் இரவு முதல் ஓட்டு எண்ணும் மையமான கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரிக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து, தனி தனியாக அமைக்கப்பட்டுள்ள நான்கு தொகுதிகளின் 'ஸ்ட்ராங் ரூம்'களிலும் மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, கலெக்டர் கிரண்குராலா, தேர்தல் பொது பார்வையாளர்கள் அனுராதா சங்கர், சந்திரசேகர் வாலிம்பே, இந்துமல்ேஹாத்ரா தலைமையில் தேர்தல் அலுவலர்கள் ஸ்ரீகாந்த், சரவணன், ராஜவேல், ராஜாமணி ஆகியோர் வேட்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் முன்னிலையில் 'ஸ்ட்ராங் ரூம்'களை பூட்டி சீல் வைத்தனர். இதில், எஸ்.பி., ஜியாவுல்ஹக், டி.ஆர்.ஓ., விஜய்பாபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சுரேஷ், சக்திவேல் மற்றும் வேட்பாளர்கள் , அரசியல் கட்சிகளின் முகவர்கள் இருந்தனர். ஓட்டு எண்ணும் மையத்திற்கு உள்ளூர் போலீசார், ஆயுதப்படை போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் என மூன்று அடுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X