பொது செய்தி

தமிழ்நாடு

விக்கிரவாண்டி தொகுதியில் 81.48 சதவீத ஓட்டு பதிவு

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில் அதிகபட்சமாக விக்கிரவாண்டி தொகுதியில் 81.48 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் 8 லட்சத்து 35 ஆயிரத்து 164 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 53 ஆயிரத்து 716 பெண் வாக்காளர்கள், 215 மூன்றாம் பாலினத்தோர் என மொத்தம் 16 லட்சத்து 89 ஆயிரத்து 95 வாக்காளர்கள் உள்ளனர்.இந்த ஏழு சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம்

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில் அதிகபட்சமாக விக்கிரவாண்டி தொகுதியில் 81.48 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் 8 லட்சத்து 35 ஆயிரத்து 164 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 53 ஆயிரத்து 716 பெண் வாக்காளர்கள், 215 மூன்றாம் பாலினத்தோர் என மொத்தம் 16 லட்சத்து 89 ஆயிரத்து 95 வாக்காளர்கள் உள்ளனர்.இந்த ஏழு சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 2,368 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் செஞ்சி தொகுதியில் இறுதியாக 78.21 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியது. அதே போல், மயிலம் தொகுதியில் 79.5 சதவீதமும், திண்டிவனம் (தனி) தொகுதியில் 78.33 சதவீதமும், வானுார் (தனி) தொகுதியில் 79.22 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியது. விழுப்புரம் தொகுதியில் 76.94 சதவீதமும், விக்கிரவாண்டி தொகுதியில் 81.48 சதவீதமும், திருக்கோவிலுார் தொகுதியில் 76.24 ஓட்டுகள் பதிவாகியது. இதன் மூலம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளிலும் 78.49 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X