விருகாவூர் சுய உதவிக்குழு கட்டடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விருகாவூர் சுய உதவிக்குழு கட்டடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா

Added : ஏப் 08, 2021
Share
கள்ளக்குறிச்சி; விருகாவூர் ஊராட்சியில் பயன்பாடில்லாமல் கிடக்கும் சுய உதவிக்குழு கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூர் ஊராட்சியில் கூத்தக்குடி மெயின் ரோட்டில் சம்பூர்ண கிராமின் ரோஜ்கார் யோஜனா திட்டத்தின்கீழ் சுய உதவிக்குழு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த, 2002-03-ம் ஆண்டில் மகளிர் மேம்பாட்டு திட்டத்திற்காக

கள்ளக்குறிச்சி; விருகாவூர் ஊராட்சியில் பயன்பாடில்லாமல் கிடக்கும் சுய உதவிக்குழு கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூர் ஊராட்சியில் கூத்தக்குடி மெயின் ரோட்டில் சம்பூர்ண கிராமின் ரோஜ்கார் யோஜனா திட்டத்தின்கீழ் சுய உதவிக்குழு கட்டடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த, 2002-03-ம் ஆண்டில் மகளிர் மேம்பாட்டு திட்டத்திற்காக கட்டப்பட்ட இந்த கட்டடம் பல மாதங்களாக பயன்பாடில்லாமல் பூட்டி கிடக்கிறது. இதனை சுற்றிலும் புற்கள் முளைத்து பாதைகள் அடைபட்டு போய் உள்ளது. இந்த கட்டடத்தை மாற்றுப்பணிகளுக்கு பயன்படுத்திட அரசுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X