திண்டிவனம் அண்ணா பொறியியல் கல்லுாரிக்கு கூடுதல் பாதுகாப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனம் அண்ணா பொறியியல் கல்லுாரிக்கு கூடுதல் பாதுகாப்பு

Added : ஏப் 08, 2021
Share
திண்டிவனம்; திண்டிவனம் தொகுதியில் பதிவான ஓட்டுக்கள் அனைத்தும், ஒட்டு எண்ணும் மையமான அண்ணா பொறியியல் கல்லுாரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. திண்டிவனம் சட்டமன்ற தொகுதியிலுள்ள 323 ஓட்டுச்சாவடிகளில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்கள் அனைத்தும், நேற்று முன்தினம் இரவு, வாகனங்கள் மூலம், ஓட்டு எண்ணும் மையமான திண்டிவனம் அண்ணா பொறியியல் கல்லுாரி

திண்டிவனம்; திண்டிவனம் தொகுதியில் பதிவான ஓட்டுக்கள் அனைத்தும், ஒட்டு எண்ணும் மையமான அண்ணா பொறியியல் கல்லுாரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. திண்டிவனம் சட்டமன்ற தொகுதியிலுள்ள 323 ஓட்டுச்சாவடிகளில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்கள் அனைத்தும், நேற்று முன்தினம் இரவு, வாகனங்கள் மூலம், ஓட்டு எண்ணும் மையமான திண்டிவனம் அண்ணா பொறியியல் கல்லுாரி வளாகத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. திண்டிவனம் தொகுதியில் பதிவான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், மற்றும் விவிபேட் உள்ளிட்டவைகள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூமிற்கு, வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில், தேர்தல் பொது பார்வையாளர் முகமது கைசர், சப்கலெக்டர் அனு மேற்பார்வையில், சீல் வைக்கப்பட்டது. இதில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சுந்தர்ராஜ், உஷா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு, வெளியாட்கள் நுழையாதவாறு, மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X