திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே பைக் மீது லாரி மோதி கூலித்தொழிலாளி இறந்தார்.கடலுார் மாவட்டம், கோட்டலாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தாஜிதீன் மகன் இப்ராஹீம், 41; கூலிவேலை செய்து வருகிறார். இவர் நேற்று காலை 10 மணியளவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பைக்கில் விருத்தாச்சலம் சென்றார். அப்போது விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லுார் அடுத்த இருவேல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்றபோது பின்னால் வந்த, டிஎன் பிஏ 9454 பதிவெண் கொண்ட லாரி இப்ராஹீம் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த இப்ராஹிம் சம்பவ இடத்திலேயே இறந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE