பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம், செஞ்சி தொகுதி ஓட்டுப்பதிவு

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
விழுப்புரம்; விழுப்புரம் தொகுதிக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் பொது பார்வையாளர் ரஞ்சிதா முன்னிலையில் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது.விழுப்புரம் சட்டசபை தொகுதியில் உள்ள 370 பூத்களில் பதிவாகிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நேற்று முன்தினம் இரவு வாகனங்களில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அவை விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம், அரசு கலை மற்றும்

விழுப்புரம்; விழுப்புரம் தொகுதிக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் பொது பார்வையாளர் ரஞ்சிதா முன்னிலையில் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது.விழுப்புரம் சட்டசபை தொகுதியில் உள்ள 370 பூத்களில் பதிவாகிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நேற்று முன்தினம் இரவு வாகனங்களில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அவை விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் வரிசையாக அடுக்கி வைத்து, நேற்று மதியம் 2.30 மணிக்கு தேர்தல் பொது பார்வையாளர் ரஞ்சிதா முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.உதவி ஆட்சியர் (பயிற்சி) ரூபினா, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அரிதாஸ், உதவி தேர்தல் அலுவலர் வெங்கடசுப்ரமணியன், அ.தி.மு.க., நகர செயலாளர் பாஸ்கரன், ஜெ., பேரவை தலைவர் ராமதாஸ், தி.மு.க., துணை செயலாளர் புஷ்பராஜ், பகுஜன் சமாஜ் கலியமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.செஞ்சிசெஞ்சி தொகுதியில் நேற்று முன்தினம் 363 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. பின்னர் நேற்று முன்தினம் இரவு செஞ்சியை அடுத்த காரியமங்கலத்தில் உள்ள தனியார் கல்லுாரிக்கு கொண்டு வரப்பட்டன. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையை நேற்று காலை தேர்தல் பார்வையாளர் வினோத்குமார் முன்னிலையில் வேட்பாளர்கள் தி.மு.க., மஸ்தான், பா.ம.க., ராஜேந்திரன், அ.ம.மு.க., கவுதம் சாகர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பார்வையிட்டனர். பின்னர் அறையை பூட்டி சீல் வைத்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர் ரகுகுமார், உதவி தேர்தல் அலுவலர்கள் ராஜன், நெகருன்னிசா, டி.எஸ்.பி., இளங்கோவன், தேர்தல் பிரிவு தனி தாசில்தார் துரைச்செல்வன், பிரபு வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X