சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயிலில் சிக்கி அடையாளம் முதியவர் பலி

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
விழுப்புரம்; விழுப்புரத்தில் சென்னை - மதுரை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கி அடையாளம் தெரியாத முதியவர் பரிதாபமாக இறந்தார்.சென்னையில் இருந்து மதுரை நோக்கி செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன்தினம் மாலை 3.30 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் முண்டியம்பாக்கத்தை கடந்து வந்த போது, சுமார் 80 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத

விழுப்புரம்; விழுப்புரத்தில் சென்னை - மதுரை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கி அடையாளம் தெரியாத முதியவர் பரிதாபமாக இறந்தார்.சென்னையில் இருந்து மதுரை நோக்கி செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன்தினம் மாலை 3.30 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் முண்டியம்பாக்கத்தை கடந்து வந்த போது, சுமார் 80 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர், தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது, ரயிலில் சிக்கி துாக்கி வீசப்பட்ட அவர், பலத்த காயங்களோடு சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த விழுப்புரம் ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் விபரம் குறித்து, விழுப்புரம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X