கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பதையொட்டி தனிமைபடுத்தப்பட்ட வார்டுகள் மீண்டும் தயார் செய்யப்பட்டு வருகிறது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைபடுத்தி சிகிச்சை அளிப்பதற்காக, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, தனியார் பள்ளி, கல்லுாரிகள், உளுந்துார்பேட்டை மாதிரி பள்ளி உட்பட பல்வேறு இடங்கள் தனிமைபடுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றப்பட்டன. அதேபோல், வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு வருபவர்களை கண்காணிப்பதற்காக தனி இடம் அமைக்கப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கொரோனாவின் பரவல் வேகம் குறைந்தது. இதையொட்டி பள்ளி, கல்லுாரிகள் பழைய நிலைக்கு மாற்றப்பட்டன.இந்நிலையில், கொரோனா தொற்றின் 2வது அலை தற்போது பரவ தொடங்கியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று நிலவரப்படி 99 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால், நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதையொட்டி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட்ட வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது.கடந்த முறை ஒரே கட்டடத்தில் 100க்கும் மேற்பட்டோரை தனிமைபடுத்தியதால், சாப்பாடு வழங்குதல், கழிப்பிடம், தொலைவு உட்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது. இந்த பிரச்னைகளை தவிர்ப்பதற்காக, தற்போது மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களிலும் 100 பெட்களுடன் தனிமைபடுத்தப்பட்ட வார்டு தயார் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE