பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ்ப் பேரவை இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
புவனகிரி; புவனகிரியில் தமிழ்ப்பேரவை சார்பில் 98வது மாத இலக்கிய சந்திப்பு மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.புவனகிரி தமிழ்ப்பேரவை சார்பில் மாதந்தோறும் நடந்து வரும் இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள், தமிழில் பிழையின்றி எழுதுவது, பேசுவது உள்ளிட்ட பல்வேறு ஆளுமையை வளர்த்துக்

புவனகிரி; புவனகிரியில் தமிழ்ப்பேரவை சார்பில் 98வது மாத இலக்கிய சந்திப்பு மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.புவனகிரி தமிழ்ப்பேரவை சார்பில் மாதந்தோறும் நடந்து வரும் இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள், தமிழில் பிழையின்றி எழுதுவது, பேசுவது உள்ளிட்ட பல்வேறு ஆளுமையை வளர்த்துக் கொள்கின்றனர்.இந்த மாதத்திற்கான இலக்கிய சந்திப்பு பாரதி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. தமிழ்ப்பேரவைத் தலைவர் வழக்கறிஞர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். செயலாளர் அன்பழகன் வரவேற்றார். பாரதி மெட்ரிக் பள்ளியின் தலைவர் டாக்டர் அன்பழகன் 'ஆழ்வார் அமுதம் விளக்கவுரையில் ஆண்டாள்' குறித்தும்; ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராமானுஜம் புறநானுாற்றில் 'வலம்படு வாய்வாள்' எனத்தொடங்கும் பாடல் குறித்தும் பேசினர். இணைச் செயலாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X